← பாரம்பரிய ஜெபங்கள்
கர்த்தருடைய ஜெபம்
The Lord's Prayer
Show Transliteration
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் பரிசுத்தம் செய்யப்படுவதாக.
உம்முடைய ராஜ்யம் வருவதாக.
உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவதுபோல் பூலோகத்திலேயும் செய்யப்படுவதாக.
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்குக் குற்றஞ்செய்தவர்களை நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனையில் கொண்டுபோகாதேயும்,
தீமையினின்று எங்களை விடுவியும்.
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென்.